9 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் கரு.பழனியப்பன்

பார்த்திபன் கனவு  மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரு பழனியப்பன் அதன்பின் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னலோரம் படங்களை இயக்கினார். மந்திர புன்னகை, நட்பே துணை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள கள்ளன் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. போதிய சினிமா வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் சென்ற அவர்  9 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்குகிறார். ஆண்டவர் என்று தலைப்பிடப்பட்ட இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Related Stories: