வெங்கட் பிரபுவின் மன்மதலீலை

மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மன்மதலீலை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் குறித்து வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படமாக இது இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது. என்றார்.

Related Stories: