புஷ்பா படத்தை பாராட்டிய கமல்

சமீபத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் வசூலை குவித்து பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் கமல்ஹாசன் படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக படத்தின் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:  நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். அல்லு அர்ஜுனும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: