தனுஷ் படத்திலிருந்து சம்யுக்தா விலகலா?

தனுஷ் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் வாத்தி. தெலுங்கில் இந்த படத்துக்கு சார் என தலைப்பு வைத்துள்ளனர். இதில் தனுஷ் ஜோடியாக நடிக்க சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் திடீரென அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. இதை அறிந்த படக்குழு, இந்த தகவல் உண்மை கிடையாது என மறுத்துள்ளது. இரு மொழிகளிலும் ஹீரோயினாக நடிக்க சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அவர் கைதேர்ந்த நடிகை. இதில் அவருக்கு வலுவான கேரக்டர் தரப்பட்டுள்ளது. அவர் மட்டுமே சோலோ ஹீரோயின். அப்படி இருக்கும்போது, எதற்காக அவர் படத்திலிருந்து விலக வேண்டும். அந்த கேரக்டரை பிடிக்க நினைத்த யாரோ ஒரு நடிகை தரப்புதான் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறது என படக்குழுவினர் கூறுகின்றனர்.

Related Stories: