கர்ப்பத்திலும் காசு பார்த்த காஜல்

நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். அதனை அவர் மறுப்பார். இந்த நிலையில் கடந்த வாரம் கவுதம் கிச்சுலு, காஜல் கர்ப்பமாக இருப்பதை மறைமுகமாக அறிவித்தார். தற்போது காஜல் அகர்வால் தனது கர்ப்பத்தை முறைப்படி அறிவித்துள்ளார். அதையும் விளம்பரமாக்கி காசு பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த ஆண்டு எனது குட்டி பாப்பாவை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேல் எந்த மகிழ்ச்சியும் கிடையாது. என்று பதிவிட்டிருக்கிறார். அதனுடன் அவர் நடித்த கருத்தரிப்பு கருவி ஒன்றின் விளம்பரம் வருகிறது. கர்ப்பத்திலுமா காசு பார்க்கணும் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories: