லவ் யூ சொன்ன ஸ்ருதி

இசை, நடிப்பு, சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடல் என்று தன்னை பிசியாக வைத்துக்கொள்ளும் ஸ்ருதிஹாசன், படங்களை மட்டும் குறைவாகவே ஒப்புக்கொள்கிறார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ள அவர், அடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இளம் நடிகர், மூத்த நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் பணியாற்றும் அவர், ஓவியர் சாந்தனு ஹசாரிகாவை தீவிரமாக காதலிக்கிறார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் நடந்த உரையாடலில், ஸ்ருதிஹாசனிடம் பேசிய சில ரசிகர்கள், அவரது காதலைப் பற்றி கேட்டனர். சாந்தனு ஹசாரிகா விஷயத்தில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது என்று ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘காதல் விஷயத்தில் சாந்தனு ஹசாரிகா அதிக ஆர்வம் காட்டினார் என்றாலும், நான்தான் முதலில் முந்திக்கொண்டு அவரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னேன்’ என்றார்.

Related Stories: