படத்திலும் அம்மா, மகள்

வரும் பொங்கலன்று அஜித் குமாரின் ’வலிமை’ படம் ரிலீசாகவில்லை. எனவே, ’கொம்புவச்ச சிங்கம்டா’, ’நாய்சேகர்’, ’என்ன சொல்ல போகிறாய்’, ’கார்பன்’, ’மருத’, ‘பாசக்கார பய’, ‘ஏஜிபி’ ஆகிய 7 படங்கள் ரிலீசாகின்றன. பாரதிராஜா உதவியாளர் ஜி.ஆர்.எஸ் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மருத’. பிக் வே பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இளையராஜா இசை அமைத்துள்ளார். ராதிகா, சரவணன், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் விஜி சந்திரசேகர், அவரது மகள் லவ்லின் இருவரும் படத்தில் அம்மா, மகளாக நடித்துள்ளனர். ஜி.ஆர்.எஸ் கூறுகையில், ‘மதுரையை ‘மருத’ என்று சொல்வார்கள். தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த வசந்த விழா என்கிற மொய் விருந்து பற்றியும், அதன் இன்னொரு பக்கத்தையும் சொல்லும் படமாக உருவாகியுள்ளது. மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘மாமன் கொடுத்த சீரு’ என்ற பாடல் மனதை உருக்கும்’ என்றார்.

Related Stories: