கஸ்தூரியால் லாபம் சம்பாதித்த படம்

காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் இபிகோ 302. கடந்த 31ம் தேதி இந்த படம் வெளியானது. பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்க வேண்டிய நான் நடிகை கஸ்தூரியால் தப்பித்தேன் என்கிறார் இயக்குனர் சலங்கை துரை. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சவுத் இந்தியன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர். செங்கோடன் துரைசாமி மற்றும் திருச்செங்கோடு கே. கே. கணேசன் மற்றும் ராபின் பிரபு ஆகியோர் இணைந்து இபிபோ 302 படத்தை எனக்காக தயாரித்தனர். டிசம்பர் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கஸ்தூரி டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவர்தான் படம் வேகமாக முடிய காரணமாக இருந்தார். கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டார். அவரை வைத்துதான் புரமோசன் பணிகளை செய்தோம்.  தியேட்டர்களில் படம் வெளியானது என்றால் அது அவர் நடித்திருந்ததால்தான். மிக சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் அவரால்தான் லாபம் சம்பாதித்தது. தற்போது கடத்தல் என்ற படத்தை தொடங்கி விட்டேன். என்றார்.

Related Stories: