இசை அமைப்பாளர் இயக்கிய படம்

தற்போது படங்களில் நடித்து வரும் தர்புகா சிவா சினிமாவுக்கு இசை அமைக்க வந்தவர். ஆனால் ராஜதந்திரம்  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும்  கிடாரி படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அதன் பிறகு என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பலே வெள்ளையத்தேவா, நிமிர், ராக்கி ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். நடிகர், இசையமைப்பாளர் என்பதை தொடர்ந்து தற்போது முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவரே இசை அமைத்தும் உள்ளார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற ஜனவரி 21ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: