அன்பறிவுக்காக அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த நெப்போலியன்

ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா  நடித்துள்ள படம் அன்பறிவு. தற்போது ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில்  தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குநர் அஸ்வின் ராம் என்னை அணுகி கதை சொன்னபோது படத்தின் திரைக்கதை மற்றும் கதாப்பாத்திரம் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்துபோனது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக நான் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்தேன். இத்துறையில் நீண்ட வருடங்கள் பயணித்து கொண்டிருப்பதால், திரைக்கதையை விவரிப்பதில் சிறந்து விளங்கும் திரைப்பட இயக்குநர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன், படத்தை உருவாக்கியபின் திரையில் இறுதிப் பதிப்பை  பார்த்தால், சொன்ன கதையைப் போல் ஈர்க்கக்கூடியதாக இருக்காது.

ஆனால் , இயக்குனர் அஸ்வின் ராம் அந்த விசயத்தில்  ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் என நிரூபித்துவிட்டார். கதையை விவரித்த விதத்தை விட அவர் எடுத்திருந்த விதம் இன்னும் அருமையாக இருந்தது. இப்படத்தில்  பிடிவாத குணம் கொண்ட முனியாண்டி எனும் கிராமத்து  பாத்திரத்தில் நடித்துள்ளேன். அன்பறிவு உருவான விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை  அளித்தது. என்றார்.

Related Stories: