ஆறு வருடங்கள் கழித்து பாக்ஸ் ஆபிசில் நேருக்கு நேர் மோதும் விஜய் சேதுபதி----, சிவகார்த்திகேயன்

ரஜினி - கமல், அஜித் - விஜய், தனுஷ் - சிம்பு வரிசையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடையே போட்டி இருந்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது ஆறு வருடங்கள் கழித்து அவர்கள் இருவரும் நேரடியாக பாக்ஸ் ஆபிசில் மோத இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படமும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஒரே தேதியில் காதலர் தின வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2013ல் எதிர்நீச்சல் மற்றும் சூது கவ்வும், 2016ல் ரெமோ மற்றும் றெக்க ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதற்கு பிறகு ஆறு வருடங்கள் கழித்து அவர்கள் தற்போது நேரடியாக மோதுகின்றனர்.

டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து உள்ளார். எஸ்ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர். சிபி சக்ரவர்த்தி அந்த படத்தை இயக்கி இருக்கிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். அதில் விஜய் சேதுபதி உடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

Related Stories:

More