அபுதாபியில் விக்ரம் வேதா

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கிற்கும் விக்ரம் வேதா என்றே தலைப்பு வைத்துள்ளனர். விஜய் சேதுபதி வேடத்தில் ஹிரித்திக் ரோஷன், மாதவன் வேடத்தில் சைப் அலிகான் நடிக்கிறார்கள். ஹிரித்திக் ரோஷன் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை தற்போது அபுதாபியில் படமாக்கி வந்தனர். அந்த முதல் ஷெட்யூல் நேற்றுடன் முடிந்தது. தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதி இந்தியிலும் இயக்கி வருகிறார்கள். விரைவில் புனேயில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க உள்ளது. இதில் சைப் அலிகான் பங்கேற்க உள்ளார். இந்த படத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

More