×

ஏப்ரலில் துப்பறிவாளன் 2

விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். பட செலவுகள் காரணமாக, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். அதன் பிறகு இந்த படத்தை தானே இயக்குவேன் என விஷால் கூறி வந்தார். இந்நிலையில் தற்போது படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஷால் நடித்து, இயக்கி, இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. ஏற்கனவே லண்டனில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, நிறுத்தப்பட்டது. அந்த காட்சிகளை மிஷ்கின் இயக்கியதால் அக்காட்சிகளை நீக்கிவிட்டு, புதிதாக படமாக்க இருக்கிறாராம் விஷால்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...