மாநாட்டுக்கு சங்கர் பாராட்டு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன்  நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மாநாடு படத்தை பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது: மாநாடு படத்தை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

சிலம்பரசன் கலக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். டைம் லூப் கதைக்களம் அருமையாக கைகொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

Related Stories:

More