வலிமை 2வது பாடல் வெளியீடு

அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் 2வது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அஜீத் நடித்து வரும் படம் வலிமை. இதில் அவருடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் முதல் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் முன்பே வெளியிடப்பட்டு விட்டது. இரண்டாவது  பாடலான நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இது தாயை நினைத்து மகன் உருகி பாடும் பாடலாக உருவாகி உள்ளது.

Related Stories:

More