பிப்ரவரியில் எப்.ஐ.ஆர்

விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் எப் ஐ ஆர். மனு ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், மவுனிகா, கவுதம் மேனன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.  படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு அப்பாவி இஸ்லாமிய இளைஞனின் கதை.

படத்தின் பணிகள் முடிந்தும், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மவுனத்தை கலைக்கும் நேரம் வந்து விட்டது எப்ஐஆர் பிப்ரவரி மாதத்தில்   தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீசாகிறது என்று கூறியிருக்கிறார்.

Related Stories:

More