×

மரைக்காயர் படம் முன்பதிவிலேயே 100 கோடி வசூல்

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், மஞ்சு வாரியர், அர்ஜூன், பிரபு நடித்த மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் முன்பதிவிலேயே 100 கோடி வசூலித்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் இப்படத்தை எடுக்கலாம் மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம் என மோகன்லால் கூறினார். அதனால் இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இப்படம் குடும்பம் மாதிரி, என் மகள் கல்யாணி, பிரணவ் மோகன்லால், என்னுடைய உதவியாளர்கள், சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் வெளியானது. படத்தின் ரிசர்வேஷன் மட்டும் 100 கோடியை தொட்டுள்ளது முதல் ஏழு நாட்கள் ஹவுஸ்ஃபுல். பெரிய ஓபனிங் மலையாளம் சினிமாவில் கிடைத்துள்ளது. என்றார்.

Tags : Maraikkayar ,
× RELATED முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்...