மகனை மது பழக்கத்துக்கு அடிமையாக்கும் தம்பி ராமய்யா

ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.சரவணா தயாரிக்கும் படம் தண்ணிவண்டி. இதில் தம்பி ராமய்யா அவரது மகன் உமாபதி, பால சரவணன், சமஸ்கிருதி, வினுதா லால், தேவதர்ஷினி, நரேன், மதுரை முத்து உள்பட பலர் நடிக்கிறார்கள். மாணிக்க வித்யா இயக்குகிறார், மோசஸ் இசை அமைக்கிறார், எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறியதாவது:  அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறவர்களை தண்ணிவண்டி என்று அழைப்பார்கள். ஆனால் படம் மதுரையில் குடிதண்ணீர் விநியோகிக்கும் இளைஞர்களை பற்றியது. அதோடு மது போதை தவிர்த்து பெண், பணம், பேராசை உள்ளிட்ட போதையில் வாழும் மனிதர்களை பற்றிய படம். தம்பி ராமய்யா பெண் போதை மிக்கவர். அவரது மகனாக அவரது நிஜ மகன் உமாபதி நடித்திருக்கிறார்.

தம்பி ராமய்யாவின் மனைவி இறந்து விடுவார் மறுநாளே தம்பி ராமய்யா தேவதர்ஷினியை திருமணம் செய்து கொண்டுவிடுவார். தன் தாம்பத்தியத்துக்கு மகன் தடையாக இருக்க கூடாது என்பதற்காக அவரை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கி தூங்க வைத்து விடுவார். இப்படி பல போதைகள் பற்றி படத்தில் இருக்கிறது. என்றார்.

Related Stories:

More