அல்லு அர்ஜுனுக்கு பரிசு கொடுத்த ராஷ்மிகா

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இம்மாதம் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கிஃப்ட் பாக்ஸ் ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார் ராஷ்மிகா. அந்த பாக்ஸில் சாக்லேட், ஸ்வீட், சில பரிசு பொருட்கள் இருந்தன. மேலும் ஒரு கடிதமும் இருந்தது.

அதில், ‘புஷ்பா படம் எனது இதயத்துக்கு நெருக்கமானது. இந்த படம் மூலம் நீங்கள் (அல்லு அர்ஜுன்) எனது சிறந்த நண்பராக கிடைத்துவிட்டீர்கள். நல்ல நண்பருக்கு ஒரு சிறு பரிசு’ என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். இந்த கிஃப்ட் பாக்சுக்காக ராஷ்மிகாவுக்கு சமூக வலைத்தளத்தில் அல்லு அர்ஜுன் நன்றி கூறியுள்ளார்.

Related Stories:

More