மீண்டும் ரீமா சென்..!

இந்த தலைப்பை பார்த்துவிட்டு, ரீமா சென் மீண்டும் நடிக்க வருகிறார் என எண்ணிக்கொள்ள வேண்டாம். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு லைம்லைட்டில் வந்திருக்கிறார். தனது பிறந்த நாளை கொண்டாடியவர், அந்த புகைப்படங்களை இணையதளத்தில் கசிய விட்டிருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரீமா சென்னுக்கு 2013ஆம் ஆண்டு ருத்ரவீரர் என்ற மகன் பிறந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய ரீமாசென் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவருடைய மகனின் புகைப்படமும் இருக்கிறது. மகனும் வளர்ந்துவிட்டார். இந்த புகைப்படங்களில் ரீமா இன்னும் இளமையாகவே இருக்கிறார் என நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டிருக்கிறார்கள்.

Related Stories:

More