விரைவில் வெளியாக காத்திருக்கும் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'

சென்னை : விஜய் ஆண்டனியின் தமிழரசன் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது அக்னிசிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிச்சைக்காரன் திரைப்படத்தின் கதையும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் விஜய் ஆண்டனிக்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தை சேர்ந்தது என்று செல்லலாம் குறிப்பாக பெண்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியானத் திரைப்படம் கோடியில ஓருவன் இந்த திரைப்படத்திலும் அம்மாவின் கனவை நிறைவேற்றும் இளைஞனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள தமிழரசன் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் கவுசல்யா ராணி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கவுள்ளார். திமிரு புடிச்சவன் திரைப்படத்தினை தொடர்ந்து இத்திரைப்படத்தில் போலீஸ் பாணியில் நடித்துள்ளார்விஜய் ஆன்டனி.

Related Stories:

More