ஆர்ஆர்ஆர் டிரெய்லர் தள்ளிவைப்பு

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, அலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் டிசம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து படத்தை தயாரிக்கும் டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரெய்லரை 3ம் தேதி வெளியிடவில்லை. புது தேதி பின்னர் அறிவிக்கப்படும்’என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லருக்கான எடிட்டிங் பணிகள் இன்னும் நிறைவடையவில்லையாம். இதனாலேயே டிரெய்லர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

Related Stories: