தமிழுக்கு வந்த கயாடு

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் உருவாகும் படங்கள் என்று விண்ணைத்தாண்டி வருவாயா 2, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற டைட்டில்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுக்கான கதையை இயக்குனரால் உருவாக்க முடியவில்லை. எனவே, வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டனர்.

ஆனால், விஷயம் அறிந்தவர்கள் சொல்லும்போது, நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், திடீரென்று அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்கின்றனர். சிம்பு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை தொடர்ந்து இப்படத்தின் மூலம் அவர் தமிழுக்கு வருகிறார். சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More