ஹெலன் ரீமேக்கில் ஜான்வி கபூர்

மலையாளத்தில் மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் என்ற படம், தமிழில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதை கோகுல் இயக்கினார். இதன் தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட மிலி என்ற படத்தில், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள ஜான்வி கபூர், ‘சிறந்த இயக்குனருடன் இணைந்து பயணித்தது நல்ல அனுபவம்’ என்று நன்றி தெரிவித்தார்.

Related Stories:

More