அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து சல்மான் கான், அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சில கருத்துகளை எழுதினார்.