கவர்ச்சி நடிகையான தற்காப்பு கலை வீராங்கனை

கொரோனா காலத்திலும் கிளாமர் படங்கள் இயக்கி கல்லா கட்டியவர் ராம்கோபால் வர்மா. அவர் அடுத்து லடுகி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இது தற்காப்பு கலை பற்றிய படம் என்று அவர் விளம்பரம் செய்தாலும் படத்தில் தூக்கலாக இருப்பது கவர்ச்சியே. இந்த படம் இந்தியிலும், தமிழில் பெண் என்ற தலைப்பிலும் வெளிவருகிறது. பிரபல தற்காப்பு கலை வீராங்கனை பூஜா பலேகர்தான் படத்தின் நாயகி.

அவரும் துணிச்சலுடன் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.  டிசம்பர் 10ம் தேதி வெளிவருகிறது. தெலுங்கில் படத்தை வெளியிட இப்போதே கடும் போட்டி நிலவுகிறது. படத்தை கேட்டு ஓடிடி நிறுவனங்களும் மோதுகின்றன. தற்காப்பு கலை பயிலும் பெண்கள் குறைவான ஆடை அணிவது இயல்பானதே. அதையே நானும் செய்திருக்கிறேன். அது உங்களுக்கு கவர்ச்சியாக தெரிந்தால் நான் என்ன செய்வது என்று கூலாக சொல்கிறார் பூஜா பலேகர்.

Related Stories:

More