நாகார்ஜூனா ஜோடி மெஹ்ரின்

தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார், நாகார்ஜூனா. ஆனால், அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் அமைவது கடினம் என்கிறார்கள். வயதைக் காரணம் காட்டி பல நடிகைகள் நழுவுகிறார்களாம். இல்லை என்றால், அதிக சம்பளம் கேட்டு அதிர வைக்கிறார்களாம். தெலுங்கில் ‘பங்கார்ராஜூ’ படத்தை தொடர்ந்து ‘தி கோஸ்ட்’ படத்தில் நடிக்கும் நாகார்ஜூனா, சொந்த காரணங்களுக்காக காஜல் அகர்வால் இப்படத்தில் இருந்து விலகியதால், அமலா பால் உள்பட பல ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். யாரும் கொடுக்கவில்லை. இறுதியில் மெஹ்ரின் பிர்சாடா ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை பிரவீன் சத்தாரு இயக்குகிறார். தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ள மெஹ்ரின் பிர்சாடா, ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லால் பேரன் பாவ்யா பிஷ்னோய் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் முடித்து, திடீரென்று திருமணத்தை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More