×

படப்பிடிப்பின் போது காயம் அடைந்த மாஸ்டர் பட நாயகி

ஹிந்தி படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டா பதிவு செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அந்த படத்தில் வழக்கமான எந்த கவர்ச்சியும் இன்றி நடித்திருப்பார் மாளவிகா. முன்னதாக பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார் மாளவிகா மோகனன்.

இதை தொடர்ந்து மாஸ்டர் அடுத்து தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை  தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரவி உட்யவார் இயக்கத்தில் சித்தான்ட் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் 'யுத்ரா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை குஷிப்படுத்தி வருகிறார் மாளவிகா. இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது மாளவிகா நடித்து வரும்  'யுத்ரா' படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பாகி உள்ளது. அப்போது  மாளவிகாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள மாளவிகா மோகனன் ; நீங்கள் ஒரு ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது, காயங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் லேசான கீறல்களாக உணர முடியும்," எனப் பதிவிட்டுள்ளார்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...