×

தேசிய விருதை தொடர்ந்து மற்றொரு விருது..! பெருமை சேர்க்கும் அசுரன் தனுஷ்

சமீபத்தில் தான் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து மற்றொரு விருதுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார் தனுஷ். சமீபத்தில் தான் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து மற்றொரு விருதுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார் தனுஷ். ஒவ்வொரு ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் நிறைவடைகிறது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில்,  பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, ஏராளமான கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கடந்த வாரம் நடிகை சமந்தா இந்த சர்வதேச படவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் மூலம் கோவா சர்வதேச பட விழாவில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகை என்கிற சிறப்பையும் இவர் பெற்றார். மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் ஒவ்வொரு வருடம், பல மொழி படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விழாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்ற 'அசுரன்' படம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dhanush ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி