தவம் இருக்கும் சமந்தா

கோவாவில் நடந்து வரும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு விருந்தினர் பிரிவில் உரையாடுவதற்காக சமந்தா அழைக்கப்பட்டார். தென்னிந்திய நடிகைகளில் அவருக்கு கிடைத்த பெரிய கவுரவம் இது. அந்த விழாவில் பங்கேற்ற சமந்தாவின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. நல்ல கதைகள் வந்தால் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் சொல்வது போல், எனக்கு அதிக மனநிறைவு கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன். பணம் சம்பாதிப்பது மட்டுமே என் நோக்கம் இல்லை. வித்தியாசமான கேரக்டர்களுக்காக தவம் இருக்கிறேன். திரையில் நான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களைப் பார்த்து என் குடும்பத்தார் பெருமைப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More