கொரோனாவுக்கு மூத்த நடிகை பலி: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

மும்பை: கொரோனா தொற்று பாதிப்பால் மூத்த பாலிவுட் நடிகை மாதவி கோக்தே மும்பையில் இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் ெதரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூத்த பாலிவுட் நடிகை மாதவி கோக்தே (58) கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து அவர் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மாதவி கோக்தே இறந்தார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் ஹிந்தி, மராத்தி படங்களிலும், டிவி சீரியல்களிலும் பல முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு கணவரும், திருமணமான மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More