கடல் அரசனின் கதை

கடந்த 1980களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் கேங்ஸ்டர் படம், ‘கோட்டைமுனி’. இதில் கோட்டைமுனியாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மற்றும் ‘வத்திக்குச்சி’, ‘காலா’ ஆகிய படங்களில் நடித்த திலீபன், அருந்ததி நாயர், சரவண சக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன் நடிக்கின்றனர்.

ட்ரீம் லைட்  பிக்சர்சுக்காக சிங்கப்பூர் என்.ஹபீப் தயாரிக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.பாண்டியன் இசை அமைக்கிறார். ப.கருப்பையா பாடல்கள் எழுதுகிறார். ந.இளைய பிரபாகரன் இயக்குகிறார். ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆழ்கடல் சண்டைக் காட்சிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படமாக்கப்படுகிறது.

Related Stories:

More