×

சிரஞ்சீவிக்கு ஆபரேஷன்

சென்னை: நடிகர் சிரஞ்சீவிக்கு கையில் அறுவை சிகிச்சை நடந்தது. நடிகர் சிரஞ்சீவி தற்போது, காட்பாதர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சியில், சமீபத்தில் நடித்தபோது அவரது கையில் உணர்வின்மை பிரச்னை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருவதால் காட்பாதர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிரஞ்சீவி கூறியிருப்பதாவது: உணர்வின்மை காரணமாக எனது வலது கையை எளிதாக பயன்படுத்த முடியவில்லை. கையின் நடு நரம்பில் சிக்கல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இது கார்பல்டன்டல் சிண்ட்ரோம் (அடிக்கடி உணர்வற்று போகுதல்) என்று டாக்டர்கள் கூறினர். இதனால் ஆபரேஷன் செய்து கொண்டேன். 45 நிமிட அறுவை சிகிச்சை நடந்து. முழுமையாக குணமடைய 15 நாள் ஆகும். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

Tags : Chiranjeevi ,
× RELATED ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு...