குழந்தை பிறந்ததை ஓராண்டுக்கு பிறகு அறிவித்தார் நடிகை ஸ்ரேயா

சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கொஸ்சீவை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 2020ம் ஆண்டு ஊரடங்கில் ஸ்ரேயா -ஆண்ட்ரே கொஸ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்த தகவலை இருவருமே மறைத்துவிட்டனர். ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹலோ மக்களே! எங்களுக்கு மிக மோசமான அதே நேரத்தில் மிக அழகான ஒரு ஊரடங்கு கிடைத்தது. ஒட்டுமொத்த உலகமும் ஒரு மிகப்பெரிய துன்பத்தை எதிர்கொண்ட நேரத்தில் எங்கள் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சாகசம் நிறைந்த, மகிழ்ச்சியான ஒரு உலகமாக மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் ஒரு தேவதை கிடைத்ததன் மூலம் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம். கடவுளுக்கு நாங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இவ்வாறு ஸ்ரேயா கூறியுள்ளார்.

Related Stories:

More
>