×

டோன்ட் பிரீத் 2 - விமர்சனம்

ஃபெட் அல்வரெஸ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம் டோண்ட் பிரீத். படத்தின் திக் திக் மொமெண்டுகள், ஒற்றை வீட்டுக்குள் நடக்கும் சேஸிங் என படம் மெகாஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றி ’டோன் ட் பிரீத் 2' ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரோடோ சயாகியூஸ் இயக்கத்தில் ஸ்டீபன் லேங், பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

ராணுவப் போரில் கண் பார்வை இழந்த நார்மன் நாட்ஸ்டோர்ம்(ஸ்டீபன் லேங்) தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார் அவரது வீட்டையும் வீட்டில் இருக்கும் பொருட்களையும் டார்கெட் செய்யும் திருட்டு கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைய, அவர்களை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ரன்னிங் சேஸிங் என ஓட விடுகிறார் நார்மன். பின்பாதியில் கதை மேற்கொண்டு செல்லச் செல்ல நார்மன் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் முதல்பாகம் சொல்லி சென்றிருக்கும். அடுத்த பாகம் எட்டு வருடங்கள் கழித்து நடக்கும் தொடர்ச்சியாக அந்தச் சண்டையில் தப்பிக்கும் நார்மன் இந்த பாகத்தில் தனது வளர்ப்பு மகளுடன் அதேபோல் ஒரு தனியான வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

பழைய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உன் அம்மா இறந்து விட்டார்’ எனச் சொல்லி வளர்ப்பு மகள் தாராவை வளர்த்து வரும் நார்மன் அவளை எங்கும் வெளியே செல்லவும் அனுமாதிக்காமல் பாதுகாத்து வருகிறார்.குழந்தையைத் தேடி ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைய பரபர மொமெண்ட்கள் ஆரம்பமாகிறது. யார் இந்த கும்பல், ஏன் நார்மன் வளர்க்கும் குழந்தையைத் தேடுகிறார்கள் என்பது மீதிக் கதை. ஸ்டீபன் லேங் அந்தப் பாகத்திலும் சரி இந்தப் பாகத்திலும் சரி மனிதர் மாஸ் செய்திருக்கிறார். கண் தெரியாத அதே சமயம் ஐயம் வில்லன், ஐயம் ஹீரோ என்பதற்கு நிகர் அவரே.

மொத்தக் கதையும் இருட்டில் சேஸிங், ஆக்‌ஷன், என சென்றுக்கொண்டிருக்கிறது. மொத்த ஆக்‌ஷனுக்கும் நான்கேரண்டி என கெத்துக் காட்டுகிறார். படத்தின் கதை முழுக்க முழுக்க இருட்டில் சென்றாலும் பெட்ரோ லூக் ஒளிப்பதிவு, மற்றும்  ரோக் பெனோஸ் இசையிலும் படத்தின் திரில் மொமெண்ட்கள் மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் விஷுவல் , லைட்டிங்கில் எங்கும் நம்மை அதீத இருட்டு என்னும் சிந்தனை வராத வண்ணம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

என்னதான் மாஸ் ஹிட் படத்தின் பாகம் என்றாலும் முதல் பாகம் கொடுத்த அந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாகத்தில் சற்றே சரிவை சந்தித்திருக்கிறது. மேலும் அந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மூலக்கதை என்பதுதான் முதல் பாகத்தின் வெற்றியே. அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் அந்தக் கான்செப்ட்டும் உடைய படம் சில இடங்களில் ப்ச்... சொல்ல வைக்கிறது.
 
நாய் சென்டிமென்ட் , இந்தப் பாகத்திலும் கைகொடுத்திருக்கிறது. சில சீன்களில் கொஞ்சம் கொடூரமாகவே ஆக்‌ஷன் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.  மொத்தத்தில் ’டோன்ட் பிரீத்’ முதல் பாகத்தின் பிரியர்களுக்கு கொஞ்சம் எமாற்றம் உண்டாகலாம், முதல் படமே இதுதான் எனப் பார்ப்போருக்கு புது ஆக்‌ஷன் அனுபவம் கிடைக்கும்.

குறிப்பு: படம் முடிந்தவுடன் ஒரு ஸ்பூஃப் காட்சி காத்திருக்கும். காத்திருந்து 3ம் பாகத்திற்கான ஹின்ட் மறக்காமல் பார்த்துவிடவும்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்