×

ரசிகர்களை மயக்கிய கீர்த்தி..!

தமிழில் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணிக் காயிதம், தெலுங்கில் குட்லக் சகி, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வாஷி, மோகன்லாலுடன் மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாடர்ன் உடையணிந்து கிளாமராக வருகிறார். இதனால், அவரது சமீபகால போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 15ம் தேதி உலக கலை தினம் என்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் தன்னை விதவிதமான கோணத்தில் வரைந்து பதிவிட்ட ஓவியங்களை ஓடவிட்டு இருந்தார். அதற்கு ‘என் இதயத்தை வென்ற ஓவியர்கள்’ என்ற தலைப்பிட்டு இருந்தார். ரசிகர்களின் கைவண்ணத்தை மதிக்கும் வகையில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags :
× RELATED சாதி அவதூறு புகாரில் நடிகை கைது 5...