திரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், முதல் பாகத்தை பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இயக்கினார். இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர். பிறகு திரிஷ்யம் படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது திரிஷ்யம் 2ம் பாகம் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. இதை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பிறகு திரிஷ்யம் 2 ரீமேக்கை தமிழில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தின் 3ம் பாகம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் பதிலளிக்கையில், ‘விரைவில் திரிஷ்யம் 3ம் பாகம் உருவாகும் என்று நம்புகிறேன். ஜீத்து ஜோசப், மோகன்லால் இணைந்து அதுபற்றி ஆலோசித்து வருகின்றனர்’ என்றார். ஜீத்து ஜோசப் கூறுகையில், ‘திரிஷ்யம் 3ம் பாகம் உருவாக்கும் எண்ணம் இல்லை. ஆனால், அதற்குரிய நல்ல கதை கிடைத்தால் இயக்குவேன். ஏழு வருடங்களுக்கு முன்பு, திரிஷ்யம் 2 உருவாக வாய்ப்பு இல்லை என்று சொன்னேன். ஆனால், இப்போது திரிஷ்யம் 2 ரிலீசாகி விட்டது’ என்றார்.

Related Stories:

More
>