×

திருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு

காதலன் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் நிழல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்களை தயாரிப்பதிலும் சில படங்களை வாங்கி வெளியிடுவதிலும் நயன்தாரா பிசியாக உள்ளார். சோலோ ஹீரோயினாக நடிக்க ஒரு சில கதைகளையும் அவர் கேட்டு வருகிறாராம். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச்சில் விக்னேஷ் சிவனை அவர் திருமணம் செய்துகொள்வார் என தகவல் பரவியது. 

ஆனால் இது பற்றி பதில் எதுவும் சொல்லாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் அடுத்த வருடம் திருணம் செய்யும் முடிவில் அவர் இருக்கிறாராம். தற்போது நடித்து வரும் படங்களை இந்த ஆண்டில் முடித்துவிட்டு, முழு நேரம், பட தயாரிப்பு, பட வினியோகம் பணிகளில் ஈடுபடவும் அப்படியே இல்லற வாழ்க்கையை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவும் யோசித்துள்ளாராம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கவும் நயன்தாரா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Nayantara ,
× RELATED மலையாள புத்தாண்டை கொண்டாட தனி...