ரைசாவின் ரகசிய காதலன்

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில்தான் நடித்திருந்தார் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியால் தமிழில் இப்போது தி சேஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ், எப்ஐஆர், அலைஸ் என 5 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹரீஷ் கல்யாணுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்ட ரைசா, மேலும் சில ஹீரோக்களுடனும் சேர்ந்து பேசப்பட்டார். ஆனால் சினிமாவுக்கு தொடர்பில்லாத ஒருவரைத்தான் அவர் காதலித்து வருகிறாராம். இந்த காதலை சஸ்பென்ஸாக மெயின்டைன் செய்து வருகிறார். பார்ட்டி பறவையான ரைசா, அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு தனது காதலனுடன் செல்வாராம். சினிமா தொடர்பான பார்ட்டியாக இருந்தால் காதலனை தவிர்த்து விடுகிறார். 

மீடியா மட்டுமின்றி, சினிமா நபர்கள் கூட தனது காதலை பற்றி தெரிந்துகொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். சினிமாவில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்யும் முடிவில் அவர் இல்லையாம். ஓரிரு வருடம் கழித்தே தனது காதலை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். இதனால் தான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் இடைவெளியை ரைசா கடைப்பிடிக்கிறாராம். அதை வைத்தே, அவர் காதல் வலையில் சிக்கியிருப்பதாக சில ஹீரோக்களும் உறுதிபட சொல்கிறார்கள்.

Related Stories:

More
>