×

விஜய்யால் பாடலாசிரியரான இயக்குனர்...!

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை நடித்துள்ள படம், உதிர். ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ளார். ஆன்மிக பாடல்களுக்கு இசை அமைத்துள்ள அரவிந்த் ராம், ஈஸ்வர் ஆனந்த் இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படம் சம்பந்தமாக இயக்குனர் பேரரசு கூறுகையில், ‘உதிர் படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

ஞான ஆரோக்கிய ராஜா என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளதாக சொன்னார். நான் பாட்டு எழுத தொடங்குவதற்கு முன்னால் மிகவும் தயங்கினேன். வேறொரு கவிஞரை பாட்டு எழுத சொன்னேன். அவர் எழுதிய வரிகள் எனக்கு திருப்தி அளிக்காததால், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

அப்போது நான் எழுதிய வரிகள் நன்றாக இருப்பதாக இசை அமைப்பாளர் தினா சொன்னார். இதையடுத்து நான் பாடலாசிரியராக மாறினேன். இயக்குனரான நான் பாட்டு எழுத முதல் காரணம், நடிகர் விஜய். அவர்தான் என்னைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். இரண்டாவது காரணம் தினா’ என்றார்.

Tags : Songwriter director ,Vijay ... ,
× RELATED விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்