×

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன் என்பதற்கு விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆமிர்கான், கரீனா கபூர் நடிக்கும் இந்தி படம் லால் சிங் சட்டா. அத்வைத் சந்தன் இயக்குகிறார். இந்த படத்தில் தமிழ் இளைஞர் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார்.

பின்னர் திடீரென அவர் படத்திலிருந்து விலகினார். உடல் எடை குறைக்காததால் அவரை பட இயக்குனர் நிராகரித்துவிட்டதாக தகவல் பரவியது. இது பற்றி பதில் சொல்லாமல் இருந்த விஜய்சேதுபதி, இப்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். அவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு காரணமாக ஆமிர்கானின் படம் தள்ளிப்போனது.

இதற்கிடையில் அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆமிர்கானின் படத்துக்கு நான் கொடுத்த தேதிகள் வீணானது. அதனால் அந்த தேதிகளை தெலுங்கு படங்களில் நடிக்க கொடுத்துவிட்டேன். இதனால் ஆமிர்கான் படத்தில் நடிக்க முடியவில்லை. இதை அவரிடமே சொல்லி, விலகிவிட்டேன்’ என்றார்.

Tags : Aamir Khan ,Vijay Sethupathi ,
× RELATED கர்ணன் திரைப்படத்தின் முதல் தோற்றம்