எல்லாம் தெரிந்த மாளவிகா

திடீரென்று மாளவிகா மோகனனுக்கு மவுசு ஏற்பட காரணம், அவரது போட்டோசெஷன் ஸ்டில்கள்தான் என்று மற்ற நடிகைகள் சொல்கின்றனர். யாருடைய கமெண்டையும் கண்டுகொள்ளாத மாளவிகா, தனக்கு எப்படி போஸ் கொடுக்க தோன்றுகிறதோ அப்படியே கொடுக்கிறார். போட்டோகிராபர்கள் சொன்னாலும் கேட்பதில்லை. தனது அழகை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியும் என்பதாக சொல்லிவிடுகிறாராம். மும்பையில் புதிய சொந்த வீட்டில் குடியேறியுள்ள அவர், ஏராளமான மாடர்ன் உடைகளை வாங்கி குவித்துள்ளாராம். 

அவற்றை தினமும் ஒன்றாக அணிந்து முடிப்பதற்கே 6 மாதங்களாகி விடும் என்கிறார்கள். ஆடை அணிகலண்களை வாங்கிக் குவிக்கும் அவர், வெளிநாடுகளில் நவீன மேக்கப் சாதனங்களையும் வாங்கி வருகிறாராம். உலகில் இன்றைய தேதியில் காஸ்ட்யூம்ஸ் மற்றும் மேக்கப் சம்பந்தமான என்னென்ன அப்டேட்டுகள் இருக்கிறது என்பதை மாளவிகாவிடம் கேட்டால் தெரியும் என்று சிலர் சொல்கிறார்கள்.

Related Stories:

>