×

பாஜக எதிர்ப்பு பார்வதி படத்துக்கு சிக்கல்

தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. இவர் தற்போது நடித்து முடித்துள்ள மலையால படம் வர்த்தமானம். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பிரச்னையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்வதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதை தேசிய விரோத நோக்கம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேல்முறையீட்டுக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!