×

பிஸியான காமெடி நடிகரான யோகிபாபுவிற்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

தமிழ் சினிமாவில் பிஸியான காமெடி நடிகரான யோகிபாபு கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருத்தணியில் இந்த திருமணம் நடந்தது. யோகி பாபு திருமணம் நடைபெற்றபோது கொரோனா மிக வேகமாக பரவி வந்த காரணத்தினால் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் அவர் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. தாயும் சேயும் நலம் என்றும் நடிகர் மனோபாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

யோகி பாபுவின் டிக்கிலோனா, கடைசி, விவசாயி, பேய் மாமா, சலூன் உட்பட பல படங்கள் 2021ல் வெளியீட்டிற்காக வரிசையில் உள்ளது. யோகி பாபு ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

Tags : Baby boy ,comedy actor ,movie world ,
× RELATED பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை கழுத்தை...