×

பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா

பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான சன்னி தியோல், பாஜ எம்.பியாகவும் உள்ளார். தனது தொகுதி பணிகள் காரணமாக அவ்வப்போது பொதுமக்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது பற்றி சன்னி தியோல் டிவிட்டரில் கூறும்போது, ‘கொரோனா பாசிட்டிவ் என எனக்கு பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ என்றார்.

Tags : Sunny Deol ,Corona ,
× RELATED ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்:...