பிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்

அமெரிக்காவின் ஆஸ்கர் விருதை போன்றது பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது (பாஃப்டா). இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் நடக்கிறது. விருதுக்காக விண்ணப்பங்களை பாஃப்டா வெளியிட்டுள்ளது. இதன் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளையாட்டு துறையில் இந்தியாவின் அற்புதமான திறமைகளை கண்டறிய பாஃப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலக புகழ்பெற்ற ஒரு அமைப்பால் இந்திய கலைஞர்கள் கவுரவிக்கப்படுவதும், உலக படைப்பாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதும் பெருமைக்குரிய ஒன்று. இந்திய கலைஞர்கள் உலக அரங்கில் வெளிப்படுவதை காண ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

Related Stories: