×

சூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்

நடிகை சனாகான் நேற்று முன்தினம் திடீரென்று ரகசிய திருமணம் செய்துகொண்டார். தமிழில் வெளியான ஈ, சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர் சனாகான். தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவரும், மெல்வின் லூயிஸ் என்பவரும் காதலித்தனர். ஆனால், திடீரென்று அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
 
இதையடுத்து சினிமாவிலிருந்து விலகுவதாகவும், பொதுச்சேவையில் ஈடுபட இருப்பதாகவும், திரையுலகை சேர்ந்த யாரும் தன்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் சனாகான். இந்நிலையில்,
நேற்று முன்தினம் இரவு சூரத் நகரில் சனாகான் திடீரென்று ரகசிய திருமணம் செய்துகொண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவருக்கும், சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து சனாகான் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

Tags : Sanakhan ,businessman ,Surat ,
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்