×

சுதா இயக்கத்தில் நடிக்க விரும்பும் விஜய் தேவரகொண்டா

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறியது: நண்பர்களுடன் சேர்ந்து சூரரைப் போற்று படம் பார்த்தேன். சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. பல காட்சிகளில் மெய்மறந்து சிலிர்த்துப் போனேன். சில காட்சிகளில் எனது நண்பர்கள் அழுததையும் பார்க்க முடிந்தது. இந்த படம் மூலம் சுதா கொங்கரா மீது மரியாதை பெருகியுள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்துள்ளது. கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.

Tags : Vijay Thevarakonda ,Sudha ,
× RELATED கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக...