×

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வேட்பாளர் ஆலோசனை கூட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. அடையாறு எம்.ஜி.ஆர், ஜானகி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி, டி.ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கலந்தாய்வு கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரியும் முன்னாள் நீதிபதியுமான எம்.ஜெயச்சந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். இன்று காலை 9.30 மணி முதல் கூட்டம் வீடியோகால் வழியாக நடக்கிறது. ‘தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளர்களின் கட்டுப்பாடு குறித்தும், விவாதிப்பதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்’ என்று தேர்தல் அதிகாரி ஜெயச்சந்திரன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags : Producers Association Election Candidate Consultative Meeting ,
× RELATED தயாரிப்பாளர் சங்க தேர்தல் வேட்பாளர் ஆலோசனை கூட்டம்