×

கணவரை பிரிந்துவிட்டேனா? பூமிகா விளக்கம்

ரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூமிகா. பத்ரி, சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, யு டர்ன் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். யோகா ஆசிரியரான பரத் தாக்கூர் என்பவரை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக இவர் கணவரை பிரிகிறார் என சில வருடங்கள் முன் தகவல் பரவியது. இந்நிலையில் மீண்டும் இதுபோல் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பூமிகா கூறியது: சமீபத்தில்தான் எனது திருமண நாளை கொண்டாடினேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். முன்பு இதுபோல் வதந்தி பரவியபோதும் அதை மறுத்தேன். இப்போதும் அதைதான் சொல்கிறேன். மற்றவர்கள் பரப்பும் தவறான தகவல்களால் எனது வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு பூமிகா கூறியுள்ளார்.

Tags :
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு